அனைவரையும் கவனிக்க வைத்த விசிக மாநாடு கட்டவுட் - ஹைலைட்டே அந்த பாயிண்டுதான்

x

கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்துார் பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்...

மாநாட்டின் முகமாக புத்தரின் உருவம் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு, மாநாட்டு பந்தலின் பக்கவாட்டில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்கள் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளன.

மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்த தலைவர்களின் கட் அவுட்கள் பிரம்மாண்டமான முறையில் மாநாட்டு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா வரிசையில் திருமாவளவனுக்கு 50 அடியில் பிரமாண்ட கட் அவுட்டுகள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளன... குடியால் குடும்பங்களை இழந்த பெண்களின் குரல்களை வார்த்தைகளாக பதிவு செய்து நுழைவு வாயிலில் பதாகைகளாக வைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்