அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் - அதிமுக வேட்பாளர் கருப்பையா உறுதி

x

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொகுதிக்குட்டபட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வரும் கருப்பையா, நார்த்தாமலை, தொடையூர், பொம்மாடிமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். வேட்பாளர் கருப்பையாவிற்கு, நார்த்தாமலையில் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், குதிரை ஆட்டம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வாக்குகளை சேகரித்த கருப்பையா, வெற்றிக்கு பின் நார்த்தாமலை பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்