காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
  • தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி.. அதிகபட்சமாக கரூரில் 54 வேட்பாளர்களும், நாகை தொகுதியில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் போட்டி.....
  • மக்களவைத் தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1085 வேட்புமனுக்களில் 135 வேட்புமனுக்கள் வாபஸ்.......... தேர்தல் ஆணையம் தகவல்....
  • தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்..... திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரிப்பு....
  • உச்சக்கட்ட தோல்வி பயத்தால் பிரதமர் மோடி விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்.. தோல்வி பயத்தால் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தாக்கு............
  • ஈபிஎஸ் ஆட்சி காலத்தில் தமிழகம் முடங்கி கிடந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...... பதவிக்காக தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர் என்றும் விமர்சனம்....
  • தேர்தல் அறிக்கையில் 560 வாக்குறுதிகளை அளித்துவிட்டு பத்து சதவிகிதத்தைக் கூட நிறைவேற்றவில்லை திமுக... முதலமைச்சர் ஸ்டாலின் மூட்டை, மூட்டையாக பொய் சொல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
  • ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள், "மோடி சோப்" பயன்படுத்துவதால் சுத்தமாகி விடுகின்றனர்... இந்தியாவில் பலரும் பயன்படுத்துவது மோடி சோப் தான என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்....
  • பெரிய, பெரிய ரவுடிகளைப் பார்த்து அரசியலுக்கு வந்த தன்னை, சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள்..... அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி..
  • மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வேலைவாய்ப்பு குறித்து கேட்டால் பக்கோடா போட சொல்கிறார்.. திமுக எம்.பி., கனிமொழி விமர்சனம்....
  • ஐபிஎல் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி அபார வெற்றி... 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை சாய்த்தது....
  • அகமதாபாத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் - ஐதராபாத் அணிகள் மோதல்..இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்