``தமிழக காவல்துறை...'' பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு கருத்து | Pollachi Jayaraman

"தமிழக காவல்துறை திறமையானது... பலம் வாய்ந்தது... சுயமாக செயல்பட விட்டாலே இது போன்ற கள்ளச்சாராயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்" என பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார்... உடுமலைப்பேட்டை அருகே உள்ள மாவடப்பு பகுதியில் மது அருந்தியதில் உடல் நலன் பாதிக்கப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் என்பவரை சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் போதை வஸ்துக்களின் சாம்ராஜ்யம் தமிழகத்தில் தலையெடுக்காமல் ஒடுக்கப்பட வேண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com