டிராக்டர் ஓட்டி... கரும்பு விவசாயிகளை கவர்ந்த பாஜக வேட்பாளர் - பிரசாரத்தில் வித்தியாசம்

x

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அத்தானி, கீழ்வாணி, ஆப்பக்கூடல், முனியப்பன் பாளையம், வெள்ளாள பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த கரும்பு விவசாயிகளிடம் வாக்கு சேகரிக்கும் விதமாக, கரும்பு டிராக்டரை ஓட்டிச்சென்று, பாஜக வேட்பாளர் முருகானந்தம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்