"மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும்"- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டம்
அமலாக்கத்துறை விசாரணை மூலம் ராகுல் காந்தியின் குரல்வளையை மத்திய அரசு நெரிக்க முயல்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்...
"மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும்"- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டம்
அமலாக்கத்துறை விசாரணை மூலம் ராகுல் காந்தியின் குரல்வளையை மத்திய அரசு நெரிக்க முயல்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சீனாவின் ஆக்கிரமிப்பு, காஷ்மீர் ஊடுருவல் என நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருவதாக கூறியுள்ளார். அவரது குரல்வளையை, அமலாக்கத்துறை விசாரணை மூலம் மத்திய அரசு நெரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தங்களை காந்தியின் வாரிசுகள் என கூறியுள்ள ரன்தீப் சுர்ஜேவாலா, மத்திய அரசுக்கு எதிரான சத்யாகிரக போராட்டத்தை தடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Next Story