அமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய விவகாரம் .. 7வது நபராக ஒருவரை கைது செய்த போலீசார்

மரைந்த ராணுவ வீரர் ல‌ஷ்மணனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்...
x
  • மரைந்த ராணுவ வீரர் ல‌ஷ்மணனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
  • அப்பொழுது அவரது வாகனம் மீது பாஜகவினர் காலணியை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அவனியாபுரம் போலீசார், பாஜகவின் மாவட்ட துணை தலைவர் குமார், பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெய கிருஷ்ணா, கோபிநாத், முகமது யாகூம் ஆகியோரை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
  • இந்த நிலையில், ஏழாவது நபராக ஜெயவேல் என்பவரை கைது செய்த போலீசார் ஜாமினில் வெளிவிட்டனர்.
  • அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்