அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு

x

அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் | "இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன்..."பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு


ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும்போது, அவரது கார் மீது பாஜகவினர் காலணி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தற்போதைய மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசுவது போன்று ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் பேசும் நபர், மற்றொருவரிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கேட்டு, அனைவரையும் வர சொல்லுமாறு கூறுகிறார்.


மேலும் அந்த நபர், மாசாக பண்ண வேண்டும் கிராண்டாக பண்ண வேண்டும் எனவும், வேறு மாதிரி பண்ணுவோம் எனவும், இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன், அரசியல் பண்ணிவிடுவோம் எனவும் கூறுகிறார்.


இந்த ஆடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்