`ஹே சூப்பர் பா..' - நீர்வளத்துறை அமைச்சர் கொடுத்த மாஸ் UPDATE
முக்கிய ஆறுகளில் வெள்ளநீரை தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, வெள்ள தீவிரத்தை கட்டுப்படுத்த 7 மாவட்டங்களில் 71 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் அமைக்கப்படும். கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும், திருவாரூர் 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி 103 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 7 மாவட்டங்களில் 10 இடங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பகிரணைகள் அமைக்கும் பணி 55 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்டத்தில் 7 குறுபாசன கண்மாய்களை புனரமைக்கும் பணி 4 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் அணைக்கட்டு, திருநெல்வேலியில் பழவூர் அணைக்கட்டுகளை புனரமைப்பு செய்யும் பணி 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், புனரமைப்பு பணிகள் 116 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
