"ஜெகன் மோகன் ரெட்டிக்கு டார்கெட்"..பரபரப்பாக பேசிய பவன் கல்யாண்

x

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆந்திராவில் நடத்தி வருகிறார். இந்நிலையில் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி பெரிய கட்சி என்றும், தற்போது அக்கட்சி தலைவர்கள் பலமிழந்த சூழலில் உள்ளதால், அந்த கட்சிக்கு பலம் தேவை என கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சிக்கு தேவையான பலத்தை தங்கள் கட்சியின் இளம் தொண்டர்கள் அளிப்பார்கள் என்றும் தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் ஜெகன் மோகன் ரெட்டியை எளிதில் வீழ்த்தலாம் என்றும் கூறினார். எனவே ஜனசேனா கட்சி என் டி ஏ கூட்டணியில் வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்