வெடிக்கும் 4 கோடி விவகாரம்.. 9.30 மணி நேரம் கிடுக்கிப் பிடி விசாரணை நயினார் பக்கம் திரும்பும் சிபிசிஐடி கண்

x

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்ப்பட்டது தொடர்பாக, நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரது நண்பர் ஆசைத்தம்பி ஆகிய இருவரும், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராகினர். மற்றொரு நண்பரான ஜெய்சங்கர், சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜரான முருகன், ஆசைத்தம்பி ஆகிய இருவரிடமும் இரவு 8.30 மணி வரை சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, 9.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையின் அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிடிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்