"சமூக நீதியை பாஜகவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை
"சமூக நீதியை பாஜகவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை
தமிழகத்தை பாஜக ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.vovtதிமுக அரசை கண்டித்து சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில்,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தின் நிறைவில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களில் முழுவதிலும் பாஜக எதிர்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்து வருவதாக தெரிவித்தார். எதிர்கட்சிகள் இருந்தாலும், பாஜகவின் ஆட்சியை பார்த்து கரைந்து விடுவதாக குறிப்பிட்டார். குடியரசுத்தலைவர் வேட்பாளராக, பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை நிற்க வைத்ததற்கு சமூக நீதியே காரணம் என அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் இருந்து அனைவரும் சமூக நீதியை கற்று கொள்ள வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.