சர்ச்சை பேச்சு.. தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் ஷோபா

x

பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழர்கள் குறித்து பேசியிருந்த மத்திய அமைச்சர் ஷோபா, மன்னிப்பு கோரினார்.

தன்னுடைய பேச்சு குறித்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தெளிவுபடுத்த விரும்புவதாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தனது கருத்துக்கள் சிலருக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்வதாக குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ஷோபா, இதற்கான மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கருத்து, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை பற்றியது மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் ஷோபா, தன்னுடைய முந்தைய கருத்தை திரும்ப‌ப் பெறுவதாக பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மன்னிப்பு கேட்டு, தனது கருத்தையும் திரும்ப‌ப் பெறுவதாக மத்திய அமைச்சர் ஷோபா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்