"சீமான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" - ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

x

கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீமானின் பேச்சு கயமைத்தனமான பேச்சு என்றும் இது வன்மையான கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார். தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என வர்ணிப்பது அநாகரீகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயல் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்