"சவுக்கு சங்கர் குழுவை இயக்கியது அண்ணாமலை.. தொடர்பில் 4 பேர்" - டிஜிபி வசம் மனுவுடன் சென்ற லிஸ்ட்

x

"சவுக்கு சங்கர் குழுவை இயக்கியது அண்ணாமலை.. தொடர்பில் 4 பேர்" - புது ட்விஸ்ட்.. டிஜிபி வசம் மனுவுடன் சென்ற லிஸ்ட்

சவுக்கு சங்கர் குழுவை இயக்கியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் காண்டீபன், குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் வந்த காண்டீபன், காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து மனு அளித்தார். அதில், காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்திய சவுக்கு சங்கரை கைது செய்ததுடன், அவருடன் தொடர்பில் இருந்த நான்கு பேரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காண்டீபன், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு உடந்தையாக சவுக்கு மீடியா எடிட்டர் முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் செயல்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள், நிறுவனத்தினரை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட இவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான் இயக்கினார் என்றும், அவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் காண்டீபன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்