"இளைஞர்களின் ஆட்ட நாயகர் எடப்பாடியார்"...அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

x

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தின் அருகே, இளைஞர்களின் ஆட்ட நாயகர் எடப்பாடியார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தின் அருகே, மதுரை மாவட்ட அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன், இந்த போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, இணையவசதி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, புதிய மருத்துவ கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் திறப்பு, மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டர் என அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்