ஏற்றே ஆக வேண்டிய ஒரு பிரிவு.. மனமில்லாமல் தயங்கி நின்ற தமிழிசை - நெகிழ்ச்சி பிரியாவிடை

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன், காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் வழி அனுப்பி வைக்கப்பட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை நேற்று தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தன்னுடைய பணிகளை முழுமையாக ஆளுநரின் செயலரிடம் ஒப்படைத்தார். முன்னதாக, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் பூஜை செய்து வழிபட்ட அவர், தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது, தமிழிசை செளந்தரராஜனுக்கு தலைமை செயலர், டிஜிபி, அரசு செயலர்கள் மற்றும் பொதுமக்கள் வழியனுப்பி வைத்தனர். அவர்களை பார்த்து கையசைத்த படி நன்றி தெரிவித்து சென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com