குடியரசு தலைவர் தேர்தல் - யஸ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

வேட்பு மனு தாக்கலில் காங்கிரஸ்., தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்...
x

குடியரசு தலைவர் தேர்தல் - யஸ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

வேட்பு மனு தாக்கலில் காங்கிரஸ்., தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகிறார்கள். திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நாடாளுமன்றம் சென்று சரியாக 12.15 மணியளவில் மாநிலங்களவை தலைமை செயலாளரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும், தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, கோவை செழியன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்