அலர்ட் மோடில் தலைநகர் சென்னை... நாளை அதிரடி கட்டுப்பாடுகள்

x

பிரதமர் மோடி நாளை சென்னையில் வாகன பேரணி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...

பனகல் பார்க் முதல் பாண்டி பஜார் வழியே தேனாம்பேட்டை சிக்னல் வரை பிரதமர் மோடி வாகன பேரணி செல்லவுள்ளார்... தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி செல்வம், பால் கனகராஜுக்கு ஆதரவாக பிரதமர் பிரச்சாரம் செய்யவுள்ளார்... இதையடுத்து சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது... கண்காணிப்பை தீவிரப்படுத்தி சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது...

அதேபோல் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்