"இந்தியா கூட்டணி..." பிரதமர் மோடியே நேரடியாக மேடையில் சொன்ன வார்த்தை

x

இந்தியா கூட்டணி என்றால் ஊழல்வாதிகளின் மறைவிடம் என்று பொருள் என பிரதமர் மோடி சாடியுள்ளார்.

பீகார் மாநிலம் நவாடாவில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தானும் வறுமையில் வாடி, இந்த இடத்திற்கு வந்துள்ளதால் நாட்டில் வறுமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தன்னை ஏழைகளின் மகன், ஏழைகளின் சேவகன் என அடையாளப் படுத்திக் கொண்ட பிரதமர், நாட்டின் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளின் வறுமையை நீக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டேன் என உறுதியளித்தார். தனது உத்தரவாதங்களைக் கண்டு இந்தியா கூட்டணி ஏன் பயப்படுகிறது? என கேள்வி எழுப்பிய அவர், இந்தியா கூட்டணி என்றால் ஊழல்வாதிகளின் மறைவிடம் என்று பொருள் என விமர்சித்தார். அத்துடன் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியினர் பேசுவதாகவும், தென்னிந்தியாவை பிரிப்போம் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வெளிப்படையாகவே அறிக்கை விடுவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்