"தி.மு.க.வை அழிக்க முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாகத் தெரியும்" - தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய அமைச்சர்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து சாய்நாதபுரத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு உதயசூரியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி இந்திய நாட்டின் ஆட்சி முறையை மாற்றி ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வர நினைக்கிறார் எனவும், ஒரு கட்சி ஆட்சி முறையின் மூலம் பிரதமர் தன்னை அதிபர் ஆக்கி கொள்ள எண்ணுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்... தமிழகத்தில் அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க 2026-ம் ஆண்டில் பிரதான எதிர்க்கட்சியாக முயல்கிறது எனவும், ஆனால், தி.மு.க.வை அழிக்க முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Next Story
