பிரதமர் மோடி சென்னை வருகை - டிரோன்கள் பறக்க அதிரடி தடை - காவல்துறை எச்சரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். இதனை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி, காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், 28 மற்றும் 29 ம் தேதி என இரு நாட்கள், டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கபட்டு உள்ளது.மேலும், தடை விதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கபட்டு உள்ளது.
Next Story