நீதிபதியை மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பு மனு..ஓபிஎஸ் தரப்பிற்கு நீதிபதி கடும் கண்டனம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஜூலை 11ம் தேதி உத்தரவில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக...
x

அதிமுக பொதுக் குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி, தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஜூலை 11ம் தேதி உத்தரவில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதாலும்,

பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பின் விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி,

தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியிடம் பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார்.

நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அவரே வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளதாகவும்,

வழக்கை உடனடியாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்