ஓ.பி.எஸ். வெளியிட்ட அறிக்கை..!
மேகதாது அணை குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்ற கர்நாடகாவின் கருத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்...
ஓ.பி.எஸ். வெளியிட்ட அறிக்கை..!
மேகதாது அணை குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்ற கர்நாடகாவின் கருத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மேகதாது அணை குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், தமிழகத்திற்கு உரிய நீரை கிடைக்காமல் தடுப்பது மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் கூறியுள்ளார். மேலும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிப்பதை, தமிழக முதலமைச்சர் தடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Next Story