என்.எல்.சி விவகாரம் - தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். வளையமாதேவி கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க முற்பட்டபோது போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, காற்றாலை, கடல் அலை, நீர்வீழ்ச்சி, சூரிய மின்சக்தி போன்ற பல வகைகளில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நிலக்கரியை வெட்டி எடுத்து மின்சாரம் தயாரிப்பது தேவையற்றது என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story
