என்.எல்.சி. விவகாரம் - அனுமதி மீறி அதிமுக எடுத்த அதிரடி முடிவு

x

என்.எல்.சி. விவகாரம் - அனுமதி மீறி அதிமுக எடுத்த அதிரடி முடிவு

என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரின் தடையை மீறி, அதிமுக சார்பாக, இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில், என்.எல்.சி. நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, விளை நிலத்தில் கால்வாய் அமைக்க விவசாயிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து புவனகிரி அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் தலைமையில் விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி, காவல்துறை தரப்பில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்