PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2022) | Night Headlines | Thanthi TV

x

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது

ஜி.எஸ்.டி விவகாரம், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது...

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று குற்றச்சாட்டு...

----------------------

நிவாரண முகாம்களில் தஞ்சம்

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதி...

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு...

---------------------

மன்னிப்பு கோரியது ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது ஓ.பி.எஸ். தரப்பு...

வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று உத்தரவு..

வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவுக்கு விட்டுவிடுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவிப்பு..

----------------------

பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

என்.எல்.சி. பொறியாளர் நியமனத்தில் நிலம் தந்த குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்...

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம்...

----------------------

27 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு...

குற்றவாளிகள் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை நீதிமன்றம் இன்று அதிரடி...

-----------------------

விரைவில் இ-பாஸ்போர்ட்

நவம்பருக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தயாராக இருக்கும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்...

நடப்பு ஆண்டிலிருந்து இ-பாஸ்போர்ட் வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் அறிவிப்பு...

----------------------

2வது நாளாக போர் பயிற்சி

தைவான் எல்லையில் 2வது நாளாக சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம்...

தைவானை சீனா தனிமைப்படுத்த முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி இன்று ஆவேசம்...

------------------------


Next Story

மேலும் செய்திகள்