அண்ணாமலை யாத்திரைக்கு புது சிக்கல்.. நள்ளிரவில் போலீஸ் கொடுத்த நோட்டீஸ் - அதிர்ச்சியில் பாஜகவினர்

x

புதுக்கோட்டையில் நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள என் மண் என் மக்கள் யாத்திரைக்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்கலாம்....

நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள் மக்கள் கூடும் இடங்கள் மருத்துவமனைகள் இருப்பதால் நடை பயண யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

பாஜக மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் காவல் துறையுடன் வாக்குவாதம்

அனுமதி மறுப்பு நோட்டீசை வாங்க பாஜக மறுப்பு

அதே வழியில் தான் செல்வோம் என்று பாஜக காவல்துறையிடம் வாக்குவாதம்

மாற்று பாதைகளில் அனுமதி வழங்க பாஜகவுடன் பேச்சுவார்த்தை காவல் துறை நடத்தி வருகிறது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் நடை பயண யாத்திரை நாளை மாலை 3 மணிக்கு கந்தர்வகோட்டை தொகுதியிலும் மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற உள்ளது இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நடை பயணத்திற்கு புதுக்கோட்டை மச்சுவாடையிலிருந்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடை பயணம் தொடங்கி பிருந்தாவனம் கீழ ராஜ வீதி வழியாக அண்ணா சிலை வரை நடைபெற மேற்கொண்டு அங்கு பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றுவதாக திட்ட விடப்பட்டு காவல்துறைக்கு இடம் அனுமதி கேட்டு பாஜக விண்ணப்பித்திருந்தது

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் புதுக்கோட்டை காவல் துறையினர் பாஜக தலைப்பில் விண்ணப்பித்துள்ள பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள் மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் இருப்பதால் தீபாவளி பண்டிகையும் இருப்பதால் கூட்டமைப்பில் இருக்கும் என்பதால் பாஜக நடை பயண வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல தடை விதித்து அனுமதி மறுத்து நோட்டீஸ் வழங்குவதற்காக காவல்துறையினர் பாஜக அலுவலகம் சென்றனர் அங்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளோடு காவல்துறையினர் அனுமதி மறுப்பு கடிதத்தை வழங்க முற்பட்டனர் ஆனால் அனுமதி மறுப்பு கடிதத்தை பாஜகவினர் வாங்க மறுத்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதே வழித்தடத்தில் தான் நாளை நாங்கள் நடைபயணத்தை மேற்கொள்வோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இருப்பினும் மாற்றுப் பாதையில் நடை பயண யாத்திரை செல்வதற்கு காவல்துறை பாஜக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்