மக்களவையில் புது நோட்டீஸ் - அரசியல் களத்தில் புது பூகம்பம்

x

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய அரசு நிதியை குறைத்தது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மக்களவையில் அளித்துள்ள கவன ஈர்ப்பு நோட்டீசில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நிதியைக் குறைத்தது ஏன்? என்று வினவியுள்ளார். 2018-19ம் ஆண்டில், ஆயிரத்து 553 கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், 2022-23ம் ஆண்டில், வெறும் 159 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்