"நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்" - பாஜக எம்எல்ஏ கடிதம்

x

நாடு முழுவதும் உணவு, மருந்து, அழகு சாதன பொருட்கள் மீதான ஹலால் சான்றிதழுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ பாசன கவுடா பாடீல் யத்னால், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பல இஸ்லாமிய அமைப்புகள், மத நிறுவனங்கள் என்ற அடையாளத்தின் கீழ், இறைச்சி உற்பத்தி, உணவு பொருள்கள், அழகுசாதனம் மற்றும் பிற நுகர்வு பொருள்கள் மீது ஹலால் சான்றிதழ் வாங்குவதை ஊக்குவித்து வருகின்றன என்றும், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அழகு சாதன பொருள்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்... முன்னதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில அரசு கடந்த சனிக்கிழமை அம்மாநிலத்தில் ஹலால் தரச் சான்று பெற்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்