உணவு பாதுகாப்பு தேசிய மாநாடு..."தமிழகத்தில் 4.98% பேர் ஏழ்மை" - அமைச்சர் சக்கரபாணி தகவல்

x

உணவு பாதுகாப்பு தேசிய மாநாடு..."தமிழகத்தில் 4.98% பேர் ஏழ்மை" - அமைச்சர் சக்கரபாணி தகவல்

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் தேசிய மாநாடு, மத்திய அமைச்சா் பியூஸ் கோயல், மத்திய இணைஅமைச்சா்கள் அஸ்வினி குமாா் சௌபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி தலைமை நடைபெற்றது. உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது, உணவு உற்பத்தி பல்வகைப்படுத்தல், பயிா் பல்வகைப்படுத்தல், ஒருங்கிணைந்த அன்னவித்ரான் தளம் 2.0, மற்றும் உணவுக் கிடங்குகளை சீா்திருத்துவது தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் பொது விநியோக திட்டம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 98சதவீத அங்காடி பரிவர்த்தனைகள் கைரேகை பதிவு மூலம் நடைபெறுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நிதி ஆயோக் அறிக்கைப்படி தமிழகத்தில் 4 புள்ளி 98 சதவீத மக்கள் மட்டுமே ஏழ்மையில் உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்