எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்வி..மத்திய அரசு சொன்ன பதில்

x

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2017ஆம் ஆண்டு 75 சிறுமிகள், 2018ஆம் ஆண்டு 90 பேர், 2019ல் 88 பேர் காணாமல் போனதாகவும், 2020ஆம் ஆண்டு 112 ஆகவும், 2021ஆம் ஆண்டு 144 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கையில், 2017இல் 191 பேரும், 2018ஆம் ஆண்டில் 195 பேரும், 2019இல் 167 பேரும், 2020ஆம் ஆண்டில் 224 பேரும், 2021ஆம் ஆண்டில் 369 பேரும் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்