சற்றும் எதிர்பாராத எதிர்க்கட்சி MPக்கள்.. மோடி செய்த தரமான சம்பவம்

மக்களவையில் தன்னை பேச விடாமல் முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு, பிரதமர் மோடி தண்ணீர் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மைய பகுதியை முற்றுகையிட்டு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மக்களவை ஊழியர் டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து பிரதமர் மோடியிடம் வழங்கினார். அதனை எடுத்து, தனக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை தட்டி அழைத்து, தண்ணீர் அருந்துமாறு கூறினார். அதனை எதிர்பாராத மாணிக்கம் தாகூர், பரவாயில்லை என்று கூறினார். அப்போது, அருகில் இருந்த மற்றொரு எம்.பி., பிரதமர் வழங்கிய தண்ணீரை வாங்கி பருகினார்.

X

Thanthi TV
www.thanthitv.com