அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி குறித்த வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

x

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிரான மனுக்கள் மீது, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாக இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது தமிழ்நாடு அரசு, அமைச்சரவையின் திருப்தியின் அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என வாதிட்டது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே, ஒருவர் அமைச்சராக நீடிப்பதற்கான தகுதியை இழப்பார் எனவும் சுட்டிக்காட்டியது. இந்தநிலையில் இந்த மனுக்கள் மீது இன்று, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்