``இதுதான் என் முதல் வாக்குறுதி'' - உத்தரவாதம் கொடுத்த துரை வைகோ

x

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, புதுக்கோட்டையில் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பேசிய துரை வைகோ, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இருப்பது போன்று, புதுக்கோட்டையிலும் ஒரு எம்.பி. அலுவலகம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு வருகைப் பதிவேடு அமைக்கப்படும் என்றும், நேரிலோ மின் அஞ்சலிலோ புகார்களை அளிக்கலாம் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்