பிரதமர் மோடிக்கு காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்

x

பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்..

விரக்தியும், கவலையும் உங்களுக்குள் இருப்பது, பாஜக தொண்டர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் தெளிவாக தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள், பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது என்று அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் என்ன எழுதியிருக்கிறது, நாங்கள் என்ன உத்தரவாதம் அளித்துள்ளோம் என்பதை வாக்காளர்கள் தாங்களாகவே படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாளிகள் என்று கூறியுள்ள கார்கே, எங்கள் உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் அதை அவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே சமாதானக் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான் என்று விமர்சித்துள்ள அவர், இந்தியாவுக்கான சீனப் பொருட்களின் இறக்குமதி 54.76 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்