தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே முக்கிய ஆலோசனை | Mallikarjun Kharge | Congress
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய நிர்வாகிகளை, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story