``நாடு முழுவதும் ரேஷனில் இலவசம்'' - பாஜகவின் முக்கிய வாக்குறுதி

x

மோடி உத்தரவாதம் என்று வெளியிடப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளைப் பார்க்கலாம்...

2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

இந்தியாவின் சார்பில் நிலவில் மனிதனைத் தரையிறக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்,

நாட்டில் புதிய சேட்டிலைட் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது...

இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படும்,

நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் வந்தே பாரத் ரயில் விரிவுபடுத்தப்படும்,

நாட்டின் பல்வேறு இடங்களிலும் மிகப்பெரிய பொருளாதார மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

நாற்காலி, ஸ்லீப்பர், மெட்ரோ உள்ளிட்ட 3 வகை வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் எனவும்

அகமதாபாத் - மும்பை விரைவு புல்லட் ரயில் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும்,

வட இந்தியாவிலும் ஒரு புல்லட் ரயில் திட்டம் துவங்க ஆய்வுப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,

நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்,

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் தொடர்ந்து செயல்படும்,

பெண்களுக்கு சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்

இந்தியா 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றப்படும்

மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்

என்றும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்