"பெண்களின் தாலியைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள்.." பிரதமர் பேச்சால் அதிரும் தேர்தல் களம்

x

மக்களவைத் தேர்தலை ஒட்டி, உத்தர பிரதேச மாநிலம், அலிகரில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியா கூட்டணியும், பொதுமக்களின் சொத்து மற்றும் வருமானம் அபகரிக்க திட்டமிட்டுள்ளது என்று கூறினார். அதனால்தான், நாட்டு மக்களின் சொத்துகள், வருமானம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுவதாக மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களிடம் இருக்கும் நகைகள் உள்ளிட்ட அவர்களின் சேமிப்பு பறிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார். தாலியைக் கூட அவர்கள் அபகரித்து விடுவார்கள என்றும் பிரதமர் மோடி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்