20 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு... சல்லடை போடும் டீம்... சிக்கிய முக்கிய ஆவணங்கள் - நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாநில துணைத் தலைவர் வீட்டில் வருமான வரித்துறையினர் 20 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டனர். தொம்மி என்கிற தாமஸ், கூடலூர் நகரில் கட்டுமான பொருள் விற்கக்கூடிய வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். பல இடங்களில் தேயிலைத் தோட்டங்களும் வைத்துள்ளார். அவர் வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வரும் நிலையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்