"ஒரு வார்த்தையாவது பேசினார்களா?" - கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

x

கேரளா மாநிலத்தில் வரும் 26-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 20 தொகுதிகளை கைப்பற்றுவது யார் என்பதில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், இடதுசாரி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இடசாரிகளையும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், 2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்கள், கேரளா மாநிலத்திற்காக ஏதாவது செய்தார்களா? என்று, கேள்வி எழுப்பினார். சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் எப்படி போராட்டம் நடத்தாமல் இருக்க முடிகிறது? என்று, பினராயி விஜயன் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்