தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை | Election 2024

x

கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கடைசி நாளான நேற்று 10 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்ற நிலையில், 194 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், ராகுல்காந்தி, ஆனி ராஜா, சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சர் முரளிதரன், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், முன்னாள் அமைச்சர் சைலஜா, முன்னாள் முதல்வர் கருணாகரன் மகன் முரளிதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். அதிகபட்சமாக கோட்டயத்தில் 14 பேரும், குறைந்தபட்சமாக ஆலந்தூரில் 5 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்