கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றார்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், திமுக எம்.பி. கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், திமுக எம்.பி. கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர்சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவருடன் கனிமொழியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
