"`இந்தியா' பெயரை கேட்டாலே அலறுகிறார்கள்.." விளாசி எடுத்த கனிமொழி MP
இந்தியா என்ற பெயரை சொன்னாலே பலபேர் அச்சப்படுவதாகவும், இது அரசியல் கூட்டணியாக இல்லாமல் சமூகநீதிக்கான கூட்டணியாக இருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துபட்டில் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, இந்தியா என்ற பெயரை சொன்னாலே பலர் அச்சப்படுகிறார்கள் என்று, இது அரசியல் கூட்டணியாக இல்லாமல் சமூகநீதிக்கான கூட்டணியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மீண்டும் ஒரு விடுதலைக்கான பாதையில் நாட்டை அழைத்து செல்வோம் என்றும் அவர் கூறினார்.
