"செங்கோல் சுக்குநூறாக தகர்ந்தது தெரியுமா?.. மதுரையை அழித்த கண்ணகியை தெரியுமா?" - கனிமொழி எம்.பி

x

மக்களவையில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலத்தை பாதுகாக்க நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது வெட்கக்கேடானது என விமர்சித்தார். நாடாளுமன்றத்திற்கு மத்திய அரசு புதிய செங்கோலை கொண்டு வந்ததாக குறிப்பிட்ட கனிமொழி, இது சோழ வம்சாவளியை சேர்ந்தது என அரசு கூறியதாகவும் ஆனால் அரசுக்கு தமிழகத்தின் வரலாறு முழுமையாக தெரியவில்லை என குறிப்பிட்டார். பாண்டியனின் செங்கோலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா என கேள்வியெழுப்பிய கனிமொழி சாமானிய மக்களுக்கு நீதி வழங்க தவறிழைத்தபோது செங்கோல் உடைந்ததாக குறிப்பிட்டார். கண்ணகியின் கதையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என கேள்வி எழுப்பிய அவர், இந்தி திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை பற்றி படிக்குமாறும் அது ஏராளமான பாடத்தை கற்றுத் தரும் என குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்