"சேவைத்துறையில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல" - முன்னாள் அமைச்சர் தங்கமணி

x

மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சேவை துறைகள் அதிக லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லதில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி, அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று உதய் மின் திட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்தத்தால் தான், அதில் கையெழுத்திட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்