"தமிழகத்தின் 10 இடங்களில்... "- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்ன அதிரடி தகவல்

x

சென்னை, ஓசூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற "கனெக்ட் மதுரை 2023" கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 600 கோடி மதிப்பிலான மதுரை எல்காட் ஐடி பார்க் திட்ட வ்ழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அதனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

`"In 10 places of Tamil Nadu..." - Minister PDR Palanivel Thiagarajan said the action information.


Next Story

மேலும் செய்திகள்