"அந்த ஒன்னுக்காக தான் 8 வருசமா முயற்சி பண்ணிட்டே இருக்கேன்" - மனம் திறந்த பிரதமர் மோடி

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வர கடந்த 8 வருடங்களாக முயற்சித்து வருதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
x

"அந்த ஒன்னுக்காக தான் 8 வருசமா முயற்சி பண்ணிட்டே இருக்கேன்" - மனம் திறந்த பிரதமர் மோடி

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வர கடந்த 8 வருடங்களாக முயற்சித்து வருதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வர கடந்த எட்டு ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொருவரையும் எவ்வாறு சென்றடைவது என்பது குறித்தும் அயராது பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி பேசினார். நாட்டில் உள்ள பெண்கள், தங்கள் வாழ்க்கை தற்போது எளிதாக உள்ளதாக உணர்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களின் வசதிகள் அதிகரித்துள்ளதால் நாட்டிற்கும் அவர்களால் பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவித்தார். எந்த விதமான பாகுபாடுமின்றி பாஜக செயல்படுவதாகவும் அதன் காரணமாகவே பாஜக மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்