அடிபட்டதோ வலது 'கட்டை' விரலில்- பேண்டேஜ் இடது 'ஆள்காட்டி' விரலில்..! அடடே புதுசா இருக்கே..!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வலது கை விரலில் அடிபட்ட நிலையில், இடது கை விரலில் பேண்டஜ் போடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வால்பாறையில் 5 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில், வாகனத்தில் ஏறும்போது அண்ணாமலையின் வலது கை கட்டை விரலில் லேசான அடிபட்டு, கையை உதறி கொண்டே பேசினார். அதைப் பார்த்த கட்சியின் பொது செயலாளர் முருகானந்தம் , கட்சி தொண்டர்களிடம் பேண்டேஜ் வாங்கி வர சொல்லி, அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கும்போது, அவருடைய இடது கைவிரலில் பேண்டேஜை ஒட்டினார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
