தொகுதி மக்களுக்கு உதவி எண் - வானதி சீனிவாசன் அதிரடி

x

கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், அவர்கள் புகாரளிக்கும் வகையில் உதவி எண் தொடங்க இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை டவுன்ஹால் பகுதியில், வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டால், அவர்களை மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டுவதாக அவர் தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பொதுமக்களின் நலனுக்காக இன்னும் இரண்டு நாள்களில் உதவி எண் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்